Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aagaya Thamarai
S. Janaki
,
Ilaiyaraaja
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
காவல்தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
காவல்தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை அருகில் வந்ததே
மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா இள மயிலே
நீ மந்திரன் போலே மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே
ஒரு மட மாது இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
ஒரு பொழுதென்னும் அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
என்று இந்த லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
கைகள் ஏந்தும் வேளையெல்லாம்
கன்னி போகும் பூவிது
முத்தம் தலைவன் இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட புதிய மது ரசம் வாழ்ந்திட
ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
புன்னகை முல்லை புது விழி குவளை
அழகிய அதரங்கள் அரவிந்த பூவோ
உந்தன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி
நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூ
செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ
மின்னும் வண்ண பூக்கள் எல்லாம்
மாலையாக ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது துலங்கிட உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்திட
ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
காவல்தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆகாய தாமரை அருகில் வந்ததே