Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaanuyarntha Solaiyile
S. P. Balasubrahmanyam
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
—BGM—
ஆண்: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன், நாவறண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன், நாவறண்டு பாடுகின்றேன்
ஆண்: வானுயர்ந்த சோலையிலே
—BGM—
ஆண்: வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
ஆண்: தேனாகப் பேசியதும், சிரித்து விளையாடியதும்
தேனாகப் பேசியதும், சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகும் என்று யாரேனும் நினைக்கவில்லை
ஆண்: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன்
ஆண்: வானுயர்ந்த சோலையிலே
—BGM—
ஆண்: ஆற்றங்கரை ஓரத்திலே, யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே, யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
ஆண்: பூத்திருந்த மலரெடுத்து, பூங்குழலில் சூடிவைத்து
பூத்திருந்த மலரெடுத்து, பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி