Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
I Will Never Let You Go
Yuvan Shankar Raja
,
Shweta Pandit
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
கைகோர்த்து நாம் நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத் துளிகள் மண்ணைச் சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
ஆ
ஆ-ஆ
ஆ-ஆ
ஆ-ஆ-ரா
ந்தே-நா-நா
இலை நீரில் மூழ்குமா
நிலாக் காதல் கூறுமா
துளிக் கூட துணையின்றி வாடுமா
கடிகார முட்கள் போல
உயிர் உன்னைச் சுற்றி வருதே
நிகழ்காலம் நிழல் இன்றி வாடுதே
சொல்லாமலே மனங்களும் சேர்ந்ததன்று
விடை சொல்லியே முறிந்தது காதல் இன்று
காற்றிலே கலையும் மேகமாய்
போகிறேன் தூரமாய்
ஆ-ஆ-ஹ-ஹா
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
கைகோர்த்து நாம் நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத் துளிகள் மண்ணைச் சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ