Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sivantha Kangal
Chanderan • Barath Veeraraghavan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மாலை தென்றல் மேகம் சாயும்
நொடியோ நல்ல நேரம்
பிரிந்து சென்று வலிகள் தந்து
காயம் தாங்கும் நானும்
வழிகள் எங்கும் செல்லும் போதும்
திரும்பி பார்த்தேன் நாளும்
உன் சிவந்த கண்கள் என்னைக் கொல்ல
சிதைந்து போனேன் நானும்
வருகிறேன் உன்னை தேடியே
தவிக்கிறேன் வழிகள் இன்றியே
காலம் கடந்தும் உன்னை நினைக்கிறேன்
இடைவெளிகள் போதும் சேரத் துடிக்கிறேன்
உயிர் சாயம் இன்றி எங்கும் நடக்கிறேன்
பல காயம் தாண்டி உடைந்து
நானும் எழுந்து நிற்கிறேன்
என் உயிரே உயிரே நீ தானடி
உணர்வே உணர்வே நீ தானடி
வலியே வலியே தந்தாயடி
உன்னால் சிவந்த கண்கள் ஆனேனடி
காற்றிலே வார்த்தைகள் சேரும் முன் சேர்ந்ததே
இதயம் அன்றோ எதனாலே?
இன்று வாசம் வீசும் பூக்களும் சொல்லுமே
நாம் நடந்தே கடந்த சாலைகளை
உன் விரல் தொடும் பரிசுகளால் எனையே தந்தேன்
இன்று நானோ உன் கனவாய் எதிரில் நின்றேன்
இன்று நானோ இங்கே நீயோ அங்கு
சொல்ல வார்த்தை இல்லை நம் காதல் எங்கே?
என் உயிரே உயிரே நீ தானடி
உணர்வே உணர்வே நீ தானடி
வலியே வலியே தந்தாயடி
உன்னால் சிவந்த கண்கள் ஆனேனடி