Skip to content

Pozhudu

Bombay S Jayashri
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் புன்மை யிருட்கணம் போயின யாவும் எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன் தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே வியப்பிது காண் பள்ளி யெழுந்தருளாயே புள்ளினம் ஆர்த்தன ஆர்த்தன முரசம் பொங்கியது எங்கும் சுதந்திர நாதம் வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய் வீதியெலாம் அணு குற்றனர் மாதர் தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர்த்திரு நாமமும் ஓதி நிற்கின்றார் அள்ளிய தெள்ளமுதன்னை எம் அன்னை ஆருயிரே பள்ளி யெழுந்தருளாயே நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ? பொன்னனையாய் வெண் பனிமுடியிமயப் பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே என்ன தவங்கள்செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ இன்னுயிரே பள்ளி யெழுந்தருளாயே மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ குதலை மொழிக்கிரங்காதொரு தாயோ கோ மகளே! பெரும் பாரதர்க்கரசே விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி வேண்டிய வாறு உனைப் பாடுதும் காணாய் இதமுற வந்து எமை ஆண்டருள் செய்வாய் ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே