Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vizhi Pesum (From "Sila Nerangalil Sila Manidhargal")
Radhan
,
Chinmayi
,
Haricharan
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ
தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ
நான் உனை சேரவே வானவில் கோலமோ
கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ
ஏக்கங்கள் காத்திட உன் விரல் பட உடைந்திடுமோ
துரு ருத்து துரு தூரு துரு ருத்து துரு தூரு துரு ருத்து துரு தூரு
அழகே நீ இளைப்பாற
ஒரு மேகம் நான் பிடித்திடவா
தினம் தோறும் கதை பேச
நிலவை நான் வாங்கவா
நீ குளித்து தலை காய
புயல் காற்றை நான் அழைத்திடவா
நித்திரையில் உனை காக்க
சூரியனை தள்ளவா
மௌனமாக நானும் பேச
உன் பதில் வருமா
வெட்கத்தில் உன் மார்பில் சாய
இடம் அது தருமா
கைகள் கோர்த்து காதல் செய்ய
வாழ்வின் வரமா
கனவில் வாழும் இந்த வாழ்க்கை
வாழ்ந்தால் சுகமா...
ஆ... ஆஅ... ஆ... துரு ருத்து துரு தூரு துரு ருத்து துரு தூரு
களைப்பாக வரும் வேளை
உனை பார்க்க வாசல் வரவா
மகிழுந்தின் ஒலி கேட்க
நெற்றி பொட்டு சூடவா
நீ உறங்க என் மடியை
தலையணையாய் நான் மாற்றிடவா
நள்ளிரவில் நீ சிணுங்க
தாலாட்டும் பாடவா
தாயை போல தாரம் நீயும்
தேவதை உறவா
சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம்
காதலின் பதிவா
உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி
பூமியில் வருவா
தந்தை என்று என்னை சொல்லி
முத்தமும் தருவா...
விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ
தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ
நான் உனை சேரவே வானவில் கோலமோ
கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ
ஏக்கங்கள் காத்திட உன் விரல் பட உடைந்திடுமோ
துரு ருத்து துரு தூரு துரு ருத்து துரு தூரு
துரு ருத்து துரு தூரு துரு ருத்து துரு தூரு ஹ்ம்ம் ஹ்ம்ம்...