Skip to content

Kanaa Kaanum Kaalangal (Extended Version)

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ? விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ? இது இடைவெளி குறைகிற தருணம் இரு இதயத்தில் மெல்லிய சலனம் இனி இரவுகள் இன்னொரு நரகம் இளமையின் அதிசயம் இது கத்தியில் நடந்திடும் பருவம் தினம் கனவினில் அவரவர் உருவம் சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் கடவுளின் ரகசியம் உலகிலே மிக இனித்திடும் பாஷை இதயம் ரெண்டு பேசிடும் பாஷை மெதுவா இனி மழை வரும் ஓசை ஆஆஆஆ... கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ? விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ? நனையாத காலைக்கெல்லாம் கடலோடு உறவில்லை நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்ற பேரில்லை பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழி இல்லை தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ? பிறி தூண்டி போனர் விரை தேடி அலைகிறதோ? தாயோடும் சில தேக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே தாவி வந்த சில விருப்பங்கள் உடிக்கும் தடுத்திடவே இங்கு வழி இல்லை ஆ... ஆ... ஆ... கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ? விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ? இது என்ன காட்டில் நின்று ஈரப்பதம் குறைகிறதே? ஏகாந்தம் பூசிங்கொண்டு அந்தி விழை அழைக்கிறதே! அதிகாலை நேரமெல்லாம் தூங்காமல் விடுகிறதே! விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே! நடைபாதை கடலில் உன் பெயர் படிபோல் நெ ஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும் படபடப்பாய் சில காமங்கள் தோன்றும் பனித்துளியாய் அது மறைவது ஏன்? நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை மனநலக்கம் அது மிக கொடுமை ஆ... ஆ... ஆ... கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ? விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ?