Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Karka Karka
Tippu, Devan, Nakul & Andrea Jeremiah
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கற்க கற்க கள்ளம் கற்க
என்று சொன்ன நமன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டி கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர் மேல் நிற்க
கற்று கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போலே
எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான் கைபிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கிறான்
மாவீரமும் ஒரு நேர்மையும்
கை கோர்த்து கொள்ள
அகராதியோ அதை ராகவன்
என அர்த்தம் சொல்ல
அதிகாரமோ ஆர்பாட்டமோ
இவன் பேச்சில் இல்லை
முன் ஆய்வது பின் பாய்வதில்
இவன் புலியின் பிள்ளை
காக்கியின் சட்டைக்கும் உண்டு
நல் கற்புகள் கற்புகள் என்று
காட்டியே தந்தவன் தானே
இரு கைகளை குலுக்கிடுவானே
ஓர் திரியும் நெருப்பும் காதல் கொண்டால்
தோன்றும் தோற்றம் இவன் தானே
கற்க கற்க கள்ளம் கற்க
என்று சொன்ன நமன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டி கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர் மேல் நிற்க
கற்று கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போலே
எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான் கைபிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கிறான்
கண் ஆயிரம் கை ஆயிரம் என தேகம் கொள்ள
இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல
வான் சூரியன் ஒரு நாளிலே காணாமல் போனால்
அவ்வானையே முழு விற்பனை செய்தேனும் மீட்பான்
நரவேட்டைகள் வேட்டைகள் ஆட இரு கைகளின் விரல்கள் நீள
எதிரிகள் எதிரிகள் சாய செங்குருதியில் தேகங்கள் தோய
ஓர் அச்சம் அச்சம் என்னும் சொல்லை தீயில் இட்டு தீர்த்தானே
கற்க கற்க கள்ளம் கற்க என்று
சொன்ன நமன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டி கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர் மேல் நிற்க
கற்று கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போலே
எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான் கைபிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கிறான்