Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Maharajanodu
Unnikrishnan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மஹராஜ்ஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜயோகம் காலம்தோறும் வாழும்
மஹராஜ்ஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜயோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கள சௌபாக்கியம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜ்ஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜயோகம் காலம்தோறும் வாழும்
கங்கைக்கொரு வங்கக் கடல் போல் வந்தான், அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக்கனா அவன் தந்தான், அவன் தந்தான்
கண்ணில் என்ன வண்ணங்கள்
சின்னச் சின்ன மின்னல்கள்
கண்ணில் என்ன வண்ணங்கள்
சின்னச் சின்ன மின்னல்கள்
ஓர் காதல் பூத்ததோ
பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ
பக்கம் வந்து கைசேர பண் பாடினாளோ
ஒரு ராகம், ஒரு தாளம், இணைகூடும் போது கானம் தான்
ராஜ்ஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜயோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கள சௌபாக்கியம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜ்ஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜயோகம் காலம்தோறும் வாழும்
மன்னன் தொடத் தன்னைத் தந்தாள் பூம்பாவை, பூம்பாவை
என்னன்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை, பேராசை
சந்திக்கின்ற சந்தர்ப்பம், சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
சந்திக்கின்ற சந்தர்ப்பம், சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
நீ கேட்க வேண்டுமோ
இலக்கணம் பார்க்காது ஓர் பாடம் கூற
இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர
என்ன வேகம் என்ன தாகம்
ஒரு காவல் தாண்டக்கூடுமோ
ராஜ்ஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜயோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கள சௌபாக்கியம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜ்ஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜயோகம் காலம்தோறும் வாழும்
மஹராஜ்ஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜயோகம் காலம்தோறும் வாழும்