Skip to content

Oru Kadhal Devadhai

Jai
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஒரு காதல் தேவதை என்னை ஆளுகிறாள் என் ஆசை கண்களில் ஊஞ்சல் ஆடுகிறாள் கல்லை தொட்டு வைரமாக்கும் காதல் பூ எங்கே? வெண்ணிலாவை காண ஏங்கும் வெள்ளை முகில் இங்கே? எங்கோ இருந்து என்னை அசைத்தாள் எந்தன் நரம்பில் வீணை இசைத்தாள் உனை தினம் தேடி தேடி நானும் பாடுகிறேன் ஒரு காதல் தேவதை என்னை ஆளுகிறாள் என் ஆசை கண்களில் ஊஞ்சல் ஆடுகிறாள் கன்னம் கொண்ட நாணத்தில் சிவப்பு வண்ணம் அள்ளுதே ரெத்தம் ஓடும் நாளத்தில் பச்சை வண்ணம் கொள்ளுதே அவளின் தேகம் எங்கிலும் மஞ்சள் வண்ணம் அள்ளுதே ஆசை பொங்கும் கண்களில் நீல வண்ணம் துள்ளுதே இனியவள் கூந்தலில் கருவண்ணமும் பாதத்தின் அடிகளில் பால் வண்ணமும் பெண்ணவள் நகங்களில் செவ்வண்ணமும் யாசகம் கேட்டு வாங்கிடுவேன் பெண்ணிடத்தில் சேகரித்த வண்ணங்கள் ஏழினிலே வானவில்லையே நான் செய்து காட்டுவேன் ஒரு காதல் தேவதை என்னை ஆளுகிறாள் என் ஆசை கண்களில் ஊஞ்சல் ஆடுகிறாள் வெண்ணிலாவை தேனிலே ஊரவைத்து வாங்கியே தட்டி தட்டி செய்ததாய் அவளின் கன்னம் தோன்றுமோ தங்க கட்டி கொண்டு தான் கேள்வி குறியை செய்ததாய் ஒட்டி வைத்த பாகமாய் அவளின் செவியும் தோன்றுமோ பழமுதிர் சோலை கனி சேர்ந்து அவளின் இதழாய் இருந்திடுமோ திருக்குறள் போலே சிக்கனமாய் அவளின் இடையும் இருந்திடுமோ பெண்ணழகை தேடிக்கொண்டே என் உயிர் வாழ்ந்திடுமோ எந்த ஜென்மம் நானும் அவளை காண்பதோ ஒரு காதல் தேவதை என்னை ஆளுகிறாள் என் ஆசை கண்களில் ஊஞ்சல் ஆடுகிறாள் கல்லை தொட்டு வைரமாக்கும் காதல் பூ எங்கே? வெண்ணிலாவை காண ஏங்கும் வெள்ளை முகில் இங்கே? எங்கோ இருந்து என்னை அசைத்தாள் எந்தன் நரம்பில் வீணை இசைத்தாள் உனை தினம் தேடி தேடி நானும் பாடுகிறேன் ஒரு காதல் தேவதை என்னை ஆளுகிறாள் என் ஆசை கண்களில் ஊஞ்சல் ஆடுகிறாள்