Skip to content

Nikkattumaa Pogattuma

Ilaiyaraaja, Mano, K. S. Chithra
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே தாவணி போய் சேலை வந்து சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி சொல்லட்டுமா தள்ளட்டுமா சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஓடையில் நான் அமர்ந்தேன் அதில் என் முகம் பார்த்திருந்தேன் ஓடையில் பார்த்த முகம் அது உன் முகம் ஆனதென்ன வாடையில் மாறிடும் பூவினைப்போல் என் நெஞ்சமும் ஆனதென்ன தேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன் தோரண வாசலிலே ஒரு சோடியை கைப்பிடித்தேன் பிடித்த கரம் இணைந்திடுமா இணைந்திடும் நாள் வருமா சொல்லட்டுமா தள்ளட்டுமா சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே தாவணி போய் சேலை வரும் சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும் நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி மல்லிகை பூச்செடி பூத்தது போல் என் உள்ளமும் பூத்ததடி அம்மனின் கோவிலிலே அன்று ஆசையில் நான் நடந்தேன் உன் மனக் கோவிலிலே மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன் நாடியது நடந்திடுமா நடந்திடும் நாள்வருமா நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே தாவணி போய் சேலை வரும் சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும் நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே சோலை கருங்குயிலே சோலை கருங்குயிலே