Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Enthaaraa Enthaaraa
M. Ghibran, Shadab Faridi and Chinmayi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
என்தாரா-என்தாரா நீயே என் தாரா
என் மனம் பூத்ததே தாரா
கண்பூரா-கண்பூரா நீயேதான் தாரா
கண்ணார காண்கிறேன் பூரா
தண்ணீரை கூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்
எதிரே என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
உன்தாரா-உன்தாரா நானே உன் தாரா
என் வானம் பூத்ததே சீரா
கண்பூரா-கண்பூரா நீயேதான் தீரா
என் பார்வை ஆனதே கூரா
தண்ணீரை கூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்
எதிரே என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
ஏனோ, இன்று ஏனோ?
நான் உந்தன் நானோ
நீயோ, இல்லை நானோ?
நாம் என்னும் நாமோ
தீண்டிலா நீ ஊஞ்சலா?
தூரலா நீ காணலா?
ப்ரத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய்
என் வார்த்தை ஆனதே
இல்லாத ஊரில் இல்லாத பேரில்
நம் காதல் வாழுமே, ஹோய் நம் காதல் வாழுமே
உன் அசைவினில் என் திசைகளை படபடவென தந்தாய்
மின்மினிகளை உன் விழிகளில் கொண்டாய்
கண் இமைகளில் என் இரவினை கதகதப்புடன் தந்தாய்
கண் அவிழ்கையில் வீண் நிலவொளி தந்தாய்
பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்
என் நாட்கள் தீர்ந்ததே
உன் பாத சூட்டில் என் காதல் பூக்கும்
நம் தேடல் தீருமே
என்தாரா-என்தாரா நீயே என் தாரா
என் மனம் பூத்ததே தாரா
கண்பூரா-கண்பூரா நீயேதான் தாரா
கண்ணார காண்கிறேன் தாரா
தண்ணீரை கூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்
எதிரே என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே