Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Unn Thalai Mudi
Maya, Karthik, Nidesh Gopalan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒருநொடி பிரிவினை கூட ஏற்கமுடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒருநொடி பிரிவினை கூட ஏற்கமுடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உச்சன் தலை மீது நீ கொடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டு தெறிக்கும்
கைகள் பற்றி கொண்டு பேசிக்கொள்ளும் நேரம் இனிக்கும்
எதிர் வரும் காற்று உன் பெயரை என்னில்
தினமும் கிறுக்கி விட்டு போகும்
நெற்றி பொட்டுகுள்ளே கொட்டி விட்டேன் என்னை முழுதும்
உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட என்னை உன் இதய பையில் வைப்பேன்
என்னை கொடுப்பேன் ஓஹோ
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒருநொடி பிரிவினை கூட ஏற்கமுடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
நீயும் என்னை தினம் தேட வேண்டும் என்று
தொலைந்து போக கொஞ்சம் ஆசை
நான் அனைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே
மேய்ச்சல் நிலமாக வீழ்ந்து கிடக்கின்றேன்
மேய்ந்து கொள் என்னை முழுதும்
தொட்டில் இன்றி தூங்கும் என் மார்பில் உந்தன் முத்தம் தினமும்
உன்னை பற்றி ஏறும் காதல் கொடி நானே
உன் கையெழுத்தை தாங்கும் காகிதமும் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே ஓஹோ
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒருநொடி பிரிவினை கூட ஏற்கமுடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ