Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Enna Idhu
Haricharan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வெண்பனி சிற்பம் மோதி
சுடும் சூரியனும் உரைந்தது என்ன?
பௌணர்மியின் ஒளி முகம் கண்டு
மரப்பாவையும் மறைந்தது என்ன?
இரும்பிலே ஓர் இதயம் இங்கு
விரல் அசைவில் உருகியதென்ன?
புதியதாய் ஒரு பிரயணம் இன்று
என் மனதில் நிகழ்வதும் என்ன?
என்ன இது?, என்ன இது?
என்னெவென்றுச் சொல்லுவது?
புதுப் புது மாற்றங்கள் நிகழ்த்திவிட்டாள்
அட என்ன இது?, என்ன இது?
சொல்ல ஒரு வார்த்தை ஏது?
உச்சி முதல் பாதம் வரை சிலிர்க்க வைத்தாய்
காற்றுப் போல வந்து
கவிதை பேசும் கண்கள் கொண்டு
மின்னல் ஒளிப் பார்வை ஒன்று
வீசிச் சென்றாய்
பேசும் ஓவியம் ஒன்று
மெல்லிய மல்லிகை சொன்னது தந்து
பேச ஒரு வார்த்தை இன்றி
பறித்துச் சென்றாய்
என்ன இது?, என்ன இது?
என்னெவென்றுச் சொல்லுவது?
புதுப் புது மாற்றங்கள் நிகழ்த்திவிட்டாள்
அட என்ன இது?, என்ன இது?
சொல்ல ஒரு வார்த்தை ஏது?
உச்சி முதல் பாதம் வரை சிலிர்க்க வைத்தாய்
ஒருமுறை கண்முன் வந்தாளே
கருவரை இரத்தம் தந்தாளே
ஆறடி உயரம், அறை நொடியில்
கரைந்திடக் கண்டேனே
கனவுகள் கோடித் தந்தாளே
தூக்கத்தை திருடிச் சென்றாளே
விழிகளை மூடும் வேலையிலே
இமைகளைத் தொலைத்தேனே
பூவிலும் மெல்லியத் தேவதையே
பூ முகம் பார்த்து சாய்ந்தேனே
பூக்கும் சின்னப் பூவில் எல்லாம்
உன் முகம் பார்த்தேனே
குளிரினைத் தந்திடும் கார்முகிழே
பருவத்தின் முன் மழைப் பொழிந்தாயே
தூரல் துவி, சாரல் வீசி
தேகம் யாவும் ஈரம் செய்ய
காற்றுப் போல வந்து
கவிதை பேசும் கண்கள் கொண்டு
மின்னல் ஒளிப் பார்வை ஒன்று
வீசிச் சென்றாய்
பேசும் ஓவியம் ஒன்று
மெல்லிய மல்லிகை சொன்னது தந்து
பேச ஒரு வார்த்தை இன்றி
பறித்துச் சென்றாய்
தூருத் தூருரு, தாரத் தாரரா
தூருத் தூருரு, தாரத் தாரரா
எறும்புகள் ஊறப் பாறைகளும்
தேய்ந்திடும் என்றுக் கேட்டேனே
சிறு உளித் தட்டி பெருமலையும்
சிதைந்திடக் கண்டேனே
இருளினில் மூழ்கி வாழ்ந்தேனே
வழி அதைத் தேடித் தேய்ந்தேனே
மரகதத் தீபம் தந்தாயே
ஒளிச் சுடர் கொண்டேனே
கரிசல் காட்டுப் பூமியிலே
கங்கை வெள்ளம் பாய்கிறதே
தேகம் எங்கும் ஓடிச்சென்று தாகம் தீர்க்கிறதே
உயிரின் மூலம் வேர்களிளும்
ஒருவித இன்பம் துளிர்கிறதே
காமம் தாண்டி
காதல் தீண்டி
காயம் எங்கும் மாயம் தோன்றி
காற்றுப் போல வந்து
கவிதை பேசும் கண்கள் கொண்டு
மின்னல் ஒளிப் பார்வை ஒன்று
வீசிச் சென்றாய்
பேசும் ஓவியம் ஒன்று
மெல்லிய மல்லிகை சொன்னது தந்து
பேச ஒரு வார்த்தை இன்றி
பறித்துச் சென்றாய்
என்ன இது?, என்ன இது?
என்னெவென்றுச் சொல்லுவது?
புதுப் புது மாற்றங்கள் நிகழ்த்திவிட்டாள்
அட என்ன இது?, என்ன இது?
சொல்ல ஒரு வார்த்தை ஏது?
உச்சி முதல் பாதம் வரை சிலிர்க்க வைத்தாய்