Skip to content

Erukanchedi

Anthakudi Ilayaraja feat. LAKSHMI
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

எருக்கஞ்செடிக்கிட்ட காதலை எடுத்து சொல்லிப்புட்டேன் அந்த இலந்தை மரத்துல ஏதேதோ எழுதி வெச்சுப்புட்டேன் அந்த மேக்காட்டு ஓடையில மேகம் கருக்குதடி என் ராசாத்தி உன்னை எண்ணி ராகம் பொறக்குதடி ஒத்தையடிப் பாதை வழி கொடுக்க மெத்தை போலக் கோரைப்புல்லும் கிடக்க மானே நீ மனசிறங்கி ஓடி வா அந்த மடையாத்து தண்ணி போல ஓடி வா ஏ மானே நீ மனசிறங்கி ஓடி வா அந்த மடையாத்து தண்ணி போல ஓடி வா எருக்கஞ்செடிக்கிட்ட காதலை எடுத்து சொல்லிப்புட்டேன் அந்த இலந்தை மரத்துல ஏதேதோ எழுதி வெச்சுப்புட்டேன் செம்பருத்தி பூவு செக்கச்செவப்புல ரோசா முத்தம் இந்த பச்ச பய புள்ள பிஞ்சு மனசுல கேட்கும் நித்தம் ஆலமரக் கிளி பொந்துக்குள்ள அங்க கேட்கும் சத்தம் அது சோடிக் கிளியைத்தான் பாடி அழைக்குது, பாரு நித்தம் வெட்கப்பட்டு விலகுற அப்ப கூட சிரிக்கிறே அந்தப் பக்கம் நடக்குறே ஆசை நெஞ்சை உசுப்புற இளந்தாரி நான் இசை பாடுறேன் பச்சைக்கிளி பாதை பார்த்திருக்கேன் எருக்கஞ்செடிக்கிட்ட காதலை எடுத்து சொல்லிப்புட்டேன் அந்த இலந்தை மரத்துல ஏதேதோ எழுதி வெச்சுப்புட்டேன் எட்டு புள்ளிக்குள்ள உன்னை வரைஞ்சேனே உன் நினைப்புல இந்த தட்டுக்கெட்ட புத்தி தானா வந்திருச்சு உன் சிரிப்புல கூரைப்பட்டு கட்ட கூப்பிடுது அட என் சேலைதான் இந்த சின்னப்புள்ள பாசம் கூடிப் போச்சு அட உன் மேலதான் காத்திருக்கும் காதலுக்கு காத்துல நான் தூது விட்டேன் வெக்கை வந்து சாமத்துல சேர்ந்திடத்தான் சொல்லி வெச்சேன் அடை காக்குறேன் அந்தக் காதலை அழகாத்தான் ஒப்படைப்பேன் எருக்கஞ்செடிக்கிட்ட காதலை எடுத்து சொல்லிப்புட்டேன் அந்த இலந்தை மரத்துல ஏதேதோ எழுதி வெச்சுப்புட்டேன் அந்த மேக்காட்டு ஓடையில மேகம் கருக்குதய்யா என் ராசாவே உன்னை எண்ணி ராகம் பொறக்குதய்யா ஒத்தையடிப் பாதை வழி கொடுக்க மெத்தை போலக் கோரைப் புல்லும் கிடக்க மாமா நீ மனசிறங்கி ஓடி வா அந்த மடையாத்து தண்ணி போல ஓடி வா ஏ மாமா நீ மனசிறங்கி ஓடி வா அந்த மடையாத்து தண்ணி போல ஓடி வா எருக்கஞ்செடிக்கிட்ட காதலை எடுத்து சொல்லிப்புட்டேன் அந்த இலந்தை மரத்துல ஏதேதோ எழுதி வெச்சுப்புட்டேன்