Skip to content

Chikki Mukki

Deva, Shankar Mahadevan, Sadhana Sargam
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

சிக்கி முக்கிக் கல்லு மோதுதே! சின்னச் சின்னப் பொறி மூளுதே! சிக்கி முக்கிக் கல்லு மோதுதே! சின்னச் சின்னப் பொறி மூளுதே! தீ நீயாக நான் பஞ்சாக பூவொன்று போராடும் தீயோடு பூவோடு சிற்றின்ப மாநாடு தேகங்கள் பரிமாறும் விருந்தொன்று நிகழ்கின்றது சிக்கி முக்கிக் கல்லு மோதுதே! சின்னச் சின்னப் பொறி மூளுதே! சிக்கி முக்கிக் கல்லு மோதுதே! சின்னச் சின்னப் பொறி மூளுதே! என் பசியறிந்து பால்குடத்தை பக்கம் வைத்து போனவர் யாரோ? நம்மைப் பூவுக்குள்ளே பூட்டி வைத்து சாவியைத் தொலைத்தவர் யாரோ? ஓ... முத்த ஈரத்திலே ஈரத்திலே எரிமலை அனைத்தது யாரோ? உன் உதட்டுவழி பல்லங்கலில் என்னுயிரை புதைத்தது யாரோ நீ நீதானா? தேகத்தை இணைத்தது காவல்துறை மோகத்தை வளர்த்தது காமன் துறை கை நான்கும் மெய் ரெண்டும் பின்னும்வேளை அப்போது சபதம் கொண்டேன் இப்போதோ சலனம் கண்டேன் பெண் மூச்சுக் காற்று மோதி மோதிக் காடு எரியக் கண்டேன் சிக்கி முக்கிக் கல்லு மோதுதே! சின்னச் சின்னப் பொறி மூளுதே! சிக்கி முக்கிக் கல்லு மோதுதே! சின்னச் சின்னப் பொறி மூளுதே! ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... இந்த பூமிக்குள்ளே தங்கம் உண்டு அதைக் கருவிகள் தெரிவிக்க வேண்டும் ஓர் ஆணுக்குள்ளே சுகங்கள் உண்டு அதைப் பெண் வந்த அறிவிக்க வேண்டும் ஓ... வான் மேகங்களைத் துடைப்பதற்கு வலி மேவிய காற்றொன்று வேண்டும் என் மோகங்களைத் துடைப்பதற்கு மீசை முறுக்கிய முத்தம் ஒன்று வேண்டும் நீ... தருவாயா? எத்தனை சுகமென்று அறிந்து கொண்டேன் இழந்த சுகத்தக்கு வருந்துகின்றேன் சிற்றின்பம் பேரின்பம் ஒன்றே என்றேன் செவ்வாயில் முத்துக் குளித்தாய் அய்யய்யோ செத்துப் பிழைத்தேன் ஆண் சிங்கம் என்றும் சைவம் அல்ல இங்கே தான் கண்டு பிடித்தேன் சிக்கி முக்கிக் கல்லு மோதுதே! சின்னச் சின்னப் பொறி மூளுதே! சிக்கி முக்கிக் கல்லு மோதுதே! சின்னச் சின்னப் பொறி மூளுதே! தீ நீயாக நான் பஞ்சாக பூவொன்று போராடும் தீயோடு பூவோடு சிற்றின்ப மாநாடு தேகங்கள் பரிமாறும் விருந்தொன்று நிகழ்கின்றது சிக்கி முக்கிக் கல்லு மோதுதே! சின்னச் சின்னப் பொறி மூளுதே! சிக்கி முக்கிக் கல்லு மோதுதே! சின்னச் சின்னப் பொறி மூளுதே!