Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kalyana Ponnu
T. M. Soundararajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்

அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்
வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க

அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல்
சில சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல்

அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல்
இது அத்தை மகள் ரத்தினத்தின்
அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்
வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க
பெண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தா மூணாகச் செய்யும் வளையல் -
இது ஒட்டாத மனசில் கிட்டாத சுகத்தைக் கட்டாயம் தரும் வளையல்
மாமியார மாமனார சாமியாரா மாத்திவிட மந்திரிச்சுத் தந்த வளையல்
காளையர்கள் கெஞ்சி வர கன்னியர்கள் கொஞ்சி வரத் தூதாக வந்த வளையல்
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் -