Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Endha Vazhi
Yuvan Shankar Raja
,
Vaikom Vijayalakshmi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ம் ம் ம் ம் ம் ம்
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கிருக்கா
கல்லுச்சாங் குருவி முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்
வேருக்கு மண் துணை மண்ணுக்கு வேர்த்துணை
தனியாக ஏதும் வாழாது
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கிருக்கா ஆ...
ஆ வெளுத்தது பாலு கருத்தது காக்கா
இது தான் இது தான் ஏழ மக்க
ஒரு சொட்டு கண்ணீர் உள்ளங் கையில் விழுந்தா
உசிர் தரும் பாவி மக்க
நேத்து வச்ச கூழு மட்டும்
சொத்து சுகம் ஆகுமே
அந்த கூழ பகுந்து கொள்ள
ஆளும் பேரும் தேடுமே
பாசக் கார சாதி எங்க கூட்டமே
வேசம் காட்டுனா நெஞ்சுல ஒட்டுமே
இத்து போன வாழ்க்க இஞ்சி போன உசிரு
உனக்கு நீயே பாரம் அப்பா
ஒத்தையில கடந்தா நெத்தி தொட்டு பாக்க
தொத்த உயிர் வேணுமப்பா
ரத்த பந்தம் பாத்திருந்தா
பத்து நூறு சொந்தம் தான்
சித்த பந்தம் கூடி வந்தா
சேந்ததெல்லாம் சொந்தந்தான்
சேல கட்டும் கூட்டம் எல்லாம் தாயிதான்
சோறு போட்டவ யாருமே சாமிதான்
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கிருக்கா
கல்லுச்சாங் குருவி முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்
வேருக்கு மண் துணை மண்ணுக்கு வேர்த்துணை
தனியாக ஏதும் வாழாது