Skip to content

Kurukku Paathaiyile

Ilaiyaraaja,Vaali,S. P. Balasubrahmanyam,Minmini
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

குறுக்குப் பாதையிலே மறிச்சி வழியில் நிக்க உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நிக்க கூறாமப் போரவளே குருவம்மா பதில் கூறாமப் போனவளே குருவம்மா அட வருத்தம் என்ன வருத்தம் என்ன பருவமா நாம வெலகி நிக்க ரெண்டும் ரெண்டு துருவமா பெ: குறுக்குப் பாதையிலே மறிச்சி வழியில் நின்னு உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நின்னு கேட்காம கேட்டு நிக்கும் மருதையா மேளம் கொட்டாம கேட்குறியே உரிமையா ஒன்ன பாக்குறப்போ உள்ளார ஒன்னு வருதையா நீயும் பரிசம் போட்டு ஒரசி பார்க்க வருவியா... ஆஆ... ஆஆ... ... ... ☼ ... ... ☼ ... ... ☼ ... ... ☼ ... ... பெ: சுண்ணாம்பு வெத்தல வெச்சு (பெ.கு: ஹோய்) சாயப் பாக்கு சந்தனம் வெச்சு (பெ.கு: ஹோய்) பொண்ணு பாக்க வந்தா என்ன மாமாவே (பெ.கு: ஹோய்) பெ.கு: பஞ்சாங்கம் ஐயரு வெச்சு (பெ: ஹோய்) பந்தலிலே நாளு குறிச்சு (பெ: ஹோய்) கண்ணாலம் செஞ்சா என்ன மாமாவே (பெ: ஹோய்) ஆ: கண்ணாலம் கட்டும் முன்னே (ஆ.கு: ஹோய்) கெட்டு மேளம் கொட்டும் முன்னே (ஆ.கு: ஹோய்) கை விரலும் பட்டா என்ன ஆகாதா (ஆ.கு: ஹோய்) ஆ.கு: வண்ணாத்து பூச்சி போல (ஆ: ஹோய்) வெள்ளருக்கு பூவ போல (ஆ: ஹோய்) முன்னழகு கண்டா நெஞ்சம் வாடாதா ஆ: அடி மஞ்ச கிழங்கே சிறு இன்ப கிழங்கே... பெ: கட்டிக் கரும்பே கொடி முல்லை அரும்பே ஆ: அடி பாக்காம போனவளே குருவம்மா ஒரு பெண்ணென வந்தது பொன்னுல பண்ணியே உருவமா ஆ... ன் பெ: குறுக்குப் பாதையிலே மறிச்சி வழியில் நின்னு கேட்காம கேட்டு நிக்கும் மருதையா உன்ன பாக்குறப்போ உள்ளார ஒன்னு வருதையா நீயும் பரிசம் போட்டு ஒரசி பார்க்க வருவியா... ... ... ☼ ... ... ☼ ... ... ☼ ... ... ☼ ... ... ஆ: பெண்ணான பெண்ணுறங்க (ஆ.கு: ஹோய்) பொன்னுமணி கண்ணுறுங்க (ஆ.கு: ஹோய்) பச்ச புல்ல போட்டு வைப்பேன் பாய் போல (ஆ.கு: ஹோய்) ஆ.கு: முத்தான முத்தழகி (ஆ: ஹோய்) பச்ச மல பொட்டழகி (ஆ: ஹோய்) முத்தம் ஒன்னு வச்சா என்ன பூ போலே (ஆ: ஹோய்) பெ: வெட்டாம வெட்டுது கண்ணு (பெ.கு: ஹோய்) கப்பம் விட்டு ஒட்டுது பொண்ணு (பெ.கு: ஹோய்) என்ன வேணும் கண்டுபுடி மாமாவே (பெ.கு: ஹோய்) பெ.கு: மெய்யாண்டி மேளத்த கொட்டு (பெ: ஹோய்) கையிரண்டும் தாளத்த தட்டு (பெ: ஹோய்) ஒன்னாட்டம் நானும் ரெடி மாமாவே ஆ: அடி தொட்டுப் புடிக்க புது மெட்டுப் படிக்க பெ: அள்ளி அணைக்க கனி கிள்ளி பறிக்க ஆ: ஆத்தோரம் எடம் இருக்கு வசதியா ஒரு ஒத்தடம் வைக்க ஒத்திக பாக்க வருவியா... பெ: குறுக்குப் பாதையிலே மறிச்சி வழியில் நின்னு உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நின்னு கேட்காம கேட்டு நிக்கும் மருதையா மேளம் கொட்டாம கேட்குறியே உரிமையா பெ.கு: ஒன்ன பாக்குறப்போ உள்ளார ஒன்னு வருதையா (ஆ: ஹையோ) நீயும் பரிசம் போட்டு ஒரசிப் பார்க்க வருவியா ஆ: அடடடட குறுக்குப் பாதையிலே மறிச்சி வழியில் நிக்க உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நிக்க கூறாமப் போனவளே குருவம்மா பதில் கூறாமப் போனவளே குருவம்மா ஆ.கு: ஒனக்கு வருத்தம் என்ன வருத்தம் என்ன பருவமா நாம வெலகி நிக்க ரெண்டும் ரெண்டு துருவமா