Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kallellam
T.M. Soundararajan, L.R. Eswari
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா
சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா
ஆஹாஹா ஆஹாஹா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் குருவாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் குருவாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண் அல்லவா
வண்ண கண் அல்லவா
உண்டென்று சொல்வதுந்தன் கண் அல்லவா
வண்ண கண் அல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடை அல்லவா
மின்னல் இடை அல்லவா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
ஆ... ஆ... கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேய் அல்லவா
கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேய் அல்லவா
அம்பிகாபதி அனைத்த அமராவதி மங்கை அமராவதி
அம்பிகாபதி அனைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா