Skip to content

Boy Frienda

DEVA, Vaali, Sujatha Mohan, Mano
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே பார்த்து ரொம்ப நாளானதே நிலவே என் நிலவே அவன் நடையோ தனியழகு உடையோ தனியழகு அப்படியோர் ஆணழகு ஆயிரத்தில் ஓரழகு பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே பாவம் என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே அவள் நடிப்பாள் தனியழகு துடிப்பாள் தனியழகு ஊடலிலே ஓரழகு கூடலிலே நூறழகு பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே உன் வாலிபம் பொல்லாதது உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன் நீ உதவ வரவில்லையே உன் மோகனம் பொன்னானது உனை விழுந்ததும் எடுத்து மடியில் வைத்தேன் நீ உனது வசம் இல்லையே எனக்கென்றே தனியாக ஸ்வாசங்கள் கிடையாது இருவருக்கும் உயிர்காற்று ஒன்றேதான் எனும்போது இந்த உறவுகள் உடையாது இதை உடைப்பவன் கிடையாது இங்கு இரவுகள் ஆனால் விரகங்கள் நமது இதயத்தை குடையாது பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே பாவை என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே சந்திரோதயம் சூர்யோதயம் உன் இருவிழி கொடுத்த இரவல்களோ என உலகம் நினைக்கின்றதே சந்தோஷமும் சங்கீதமும் நீ மருவிட விளையும் அருவிகளோ என் மனது நனைக்கின்றதே நாம் இதுபோல் தினம்தோறும் நனைந்தபடி இருப்போமா நான் யாரோ நீ யாரோ நமை நாமே மறப்போமா உன் விரல் நகம் படும்போது இந்த விண்ணுக்கு வலிக்காது எனை தொடையினில் ஏந்தி தினசரி மீட்டு எனக்கது சலிக்காது பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே பாவை என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே அவன் நடையோ தனியழகு உடையோ தனியழகு அப்படியோர் ஆணழகு ஆயிரத்தில் ஓரழகு பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே பார்த்து ரொம்ப நாளானதே நிலவே என் நிலவே