Skip to content

Oruthi Oruvanai

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

F-ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - அந்த உறவுக்குப் பெயரென்ன? M- காதல் F - அந்த ஒருவன் ஒருத்தியை மணந்துகொண்டால் அந்த உரிமைக்குப் பெயர் என்ன? M-குடும்பம் F - நினைத்தவன் அவளை மறந்து விட்டால்அந்த நிலைமையின் முடிவென்ன? M - துயரம் F - பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அங்குபெண்மையின் நிலை என்ன? M -மௌனம் F - ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்- அந்த உறவுக்குப் பெயரென்ன? M - காதல் F - இரவும் பகலும் உன்னுருவம் - அதில் இங்கும் அங்கும் உன் உருவம் இரவும் பகலும் உன்னுருவம் - அதில் இங்கும் அங்கும் உன் உருவம் M - அடக்கம் என்பது பெண்ணுருவம் -அதை அறிந்தால் மறையும் என்னுருவம் அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அறிந்தால் மறையும் என்னுருவம் F - மறைக்க முயன்றேன் முடியவில்லை - உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை மறைக்க முயன்றேன் முடியவில்லை - உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை M - நினைக்கும் நிலையிலும் நான் இல்லை- உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை F - ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்- அந்த உறவுக்குப் பெயரென்ன? M - காதல் F - கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை M - வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை F - கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி கண்டேன் கண்டது நல்ல வழி - அது காதலன் உடனே செல்லும் வழி M - சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் - நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன் F - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்- அந்த உறவுக்குப் பெயரென்ன? M- காதல்