Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Raanuvan Oruvan
Lakshith
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ராணுவன் ஒருவன் நாட்டின் எல்லையிலே இருந்தான்
எதிரிகள் யாரும் இல்லை என்று அவன் சலித்தான்
தூரத்திலே பட்டாம்பூச்சி பறந்ததை பார்த்ததும்
அதை நோக்கி நடந்தான் நண்பர்களைக் கடந்தான்
ராணுவணை காணவில்லை நண்பர்களும் தேடினர்
காணவில்லை என்று தலைவரிடமும் கூறினர்
எதிரியின் வேலை என தலைவரும் நினைத்தார்
பதட்டத்தை மறைத்திட நகத்தினை கடித்தார்
என்ன செய்ய என்ன செய்ய என்று அவர் நினைத்தார்
பிரதமரின் தொலைபேசி எண்ணை அவர் அழைத்தார்
நடந்ததை அவரிடம் பதட்டத்தில் உரைத்தார்
பிரதமரும் போரிட அனுமதி அளித்தார்
ராணுவர்கள் திரண்டிட அறிவிப்பு ஒலித்தது
கானா போன ரகசியம் அவ்விடத்தில்
கோபம் அவர்களின் மனதில் நுழைந்தது
அமைதி காத்திட இதயங்கள் மறந்தது
பல நூறு மரணங்கள் ஆயிரம் கேள்விகள்
இரு பக்கம் இழப்புகள் தந்தை இல்லா குழந்தைகள்
யாருடன் சண்டை ஏன் இந்த போர் என்று
அறியாமல் உயிரிழந்திடும் எதிரிகள்
உலகம் முழுதும் இதை பற்றி பேசிட
பொருளாதாரம் நொடியினில் சரிந்திட
நாளின் முடிவும் மெதுவாய் நெருங்கிட
சூரியன் மறைந்திட சந்திரன் விலகிட
ராணுவன் ஒருவன் நாட்டின் எல்லையிலே இருந்தான்
எதிரிகள் யாரும் இல்லை என்று அவன் சலித்தான்
தூரத்திலே பட்டாம்பூச்சி பறந்ததை பார்த்ததும்
அதை நோக்கி நடந்தான் நண்பர்களைக் கடந்தான்
நானிலே