Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kannukkul Yedho
Vijay Yesudas & Reeta
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறி விட்டது
கண் நேசம் இது தான் காதல் என்பதா
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
காதல் வந்து கெடுத்த பின் கவிதைகள் படிக்கிறேன்
தோழிகளை தவிர்க்கிறேன் உன்னை தேடி வருகிறேன்
தாய் தந்தை இருந்தும் ஏன் தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்
எந்தன் வீட்டை சொந்தம் என்று நேற்று வரை நினைத்தவள்
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்
உன்னை காதலித்த கணமே உனக்குள் வந்தேன்
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்
கனவுகள் இங்கு இல்லை கண் விழித்து நினைக்கிறேன்
பெண்ணே நானோ உன்னை இன்றும் மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட
அன்பே நானோ இருக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட
உண்மை காதலில் சாதல் இல்லையடி
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறி விட்டது
கண் நேசம் இது தான் காதல் என்பதா
ஹ்ம்ம் ஹா ஹா ஹ்ம்ம்...