Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Unnale
G.V. Prakash Kumar, Shankar Mahadevan, Shreya Ghoshal, Na. Muthukumar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உன்னாலே கண்கள் தள்ளாடி
உறங்காமல் ஏங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட-தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நான் என் பெண்மையில் வாசம் உணர்ந்தேன்
நீ அருகில் வர-வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையில் காவல் துறந்தேன்
முன்ஜென்மம் எல்லாம் பொய்யென்று நினைத்தேன்
உன் கண்ணை பார்த்தேன் மெய்தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டுபோகும்
உள்ளத்தின் காதல் சாகாதடி
உன்னாலே கண்கள் தள்ளாடி
உறங்காமல் ஏங்கும் என் ஆவி
ஏதோ ஒன்றை உன்னில் கண்டேன்
எரியும் தீயை நான் என்னில் கண்டேன்
உயிரின் உயிராய் உன்னை கண்டேன்
என்னை அள்ளி உன் கையில் தந்தேன்
காதல் கொண்டு கண்கள் கெஞ்ச
அடி கைமீறி உயிர் ஓடுதே
உன்னாலே கண்கள் தள்ளாடி
உறங்காமல் ஏங்கும் என் ஆவி
முழுதாய் நிலவு நம்மை பார்க்க
காற்றில் எங்கும் அது மாயம் சேர்க்க
கைகள் கோர்த்து நீ வெப்பம் சேர்க்க
வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க்க
மரணம் தாண்டி வாழும் காதல்
உன் விழியோரம் நான் காண்கிறேன்
உன்னாலே கண்கள் தள்ளாடி
உறங்காமல் ஏங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட-தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நான் என் பெண்மையில் வாசம் உணர்ந்தேன்
நீ அருகில் வர-வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையில் காவல் துறந்தேன்
முன்ஜென்மம் எல்லாம் பொய்யென்று நினைத்தேன்
உன் கண்ணை பார்த்தேன் மெய்தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டுபோகும்
உள்ளத்தின் காதல் சாகாதடா