Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Parthu Parthu (Female Vocals)
K. S. Chithra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்
நீ வருவாயென நீ வருவாயென
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகி ஆகி விட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்
நீ வருவாயென நீ வருவாயென
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை
இமைகள் என்னோடு சண்டை போடுதே எதிரில் வந்தால் என்ன
தினமும் கண்ணோரம் தீபம் வைக்கிறேன் வெளிச்சம் தந்தால் என்ன
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்