Skip to content

Idhu Kadhalalin

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

இது காதலின் சங்கீதம் புது குங்கும சந்தோஷம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேர்கிறது வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது நிலவினை கிரகணம் தீண்டியது மறுபடி பௌர்ணமி தோன்றியது விதியும் புதியது கதையும் புதியது காலத்தின் தீர்ப்பு இது தெய்வத்தின் சேர்ப்பு இது இது காதலின் சங்கீதம் புது குங்கும சந்தோஷம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை பெண்ணுக்கு பெண்ணிங்கே எதிரியில்லை பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை அத்தை கண்களில் அன்னை தோன்றினால் தோன்றினும் மாகாளி அவள் பரிசுத்த பொன் தாயி இது காதலின் சங்கீதம் புது குங்கும சந்தோஷம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்...!