Skip to content

Poga Poga

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

போகப் போக பூமி விரிகிறதே போகப் போக வானம் தெரிகிறதே தேடத் தேட யாவும் கிடைக்கிறதே... ஏய் ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே... ஏய் முடிவில்லை எதற்கும் இங்கே இருள் முடிந்துவிட்டால் பகல் துவங்கிவிடும் மழை முடிந்துவிட்டால் வெயில் துவங்கிவிடும் அலை முடிந்துவிட்டால் கரை துவங்கிவிடும் சுமை முடிந்துவிட்டால் சுகம் துவங்கிவிடும் இதை உணர்ந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் எல்லாம் முடிந்துவிட்டால் மனம் உணர்ந்து விடும் தெளிந்து விடும் நிமிர்ந்து விடும் ஓஓஹோ... போகப் போக பூமி விரிகிறதே போகப் போக வானம் தெரிகிறதே... ஏய் தேடத் தேட யாவும் கிடைக்கிறதே... ஏய் ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே... ஏய் உற்சாகம் எங்கே எங்கே உள்ளம் திறந்து பார் கொண்டாட்டம் எங்கே எங்கே தன்னை மறந்து பார் ஆனந்தம் எங்கே எங்கே கைகள் ரெண்டை தட்டிப்பார் சத்தோஷம் எங்கே எங்கே காலின் கீழே உற்றுப்பார் எதையோ எதையோ தேடித்தேடி நம்மை தொலைத்தோமே ஹேய் வாடா வாடா நம்மை நாமே கண்டு பிடிப்போமே துள்ளிக்குதிப்போம் விண்ணை இடிப்போம் இன்னும் இன்னும் நெஞ்சம் கலப்போம்... போகப் போக பூமி விரிகிறதே போகப் போக வானம் தெரிகிறதே... ஏய் தேடத் தேட யாவும் கிடைக்கிறதே... ஏய் ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே... ஏய் போகட்டும் தப்புத்தப்பாய் போட்டக் கணக்கு தோன்றட்டும் இன்று முதல் ரெட்டை கிழக்கு கைக்கெட்டும் தூரத்தில்தான் வானம் வந்து கிடக்கு பூக்கள் தொங்கும் மேடை மேலே வாழ்க்கை உண்டு நமக்கு வெளியே வெளியே நிம்மதியே தேடி தேடி திரிவார் உள்ளே உள்ளே மனசுக்குள்ளே தேட மறப்பார் சிலர் சிரிப்பார் சிலர் துடிப்பார் சுற்றிச் சுற்றி உன்னை எதிர்ப்பார் போகப் போக பூமி விரிகிறதே விரிகிறதே விரிகிறதே விரிகிறதே போகப் போக வானம் தெரிகிறதே... ஏய் தெரிகிறதே தெரிகிறதே தெரிகிறதே தேடத் தேட யாவும் கிடைக்கிறதே... ஏய் ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே... ஏய்