Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Devane Ennai
T.M. Soundararajan, M.S. Viswanathan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தேவனே, என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
தேவனே, என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்
நீங்கள் அறிவீர், மன்னித்தருள்வீர்
Oh my lord, pardon me
உங்கள் மந்தையில் இருந்து
இரண்டு ஆடுகள், வேறு வேறு பாதையில் போய்விட்டன
இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே
தாய் மடியிலே மழலைகள் ஊமையோ
சேய் உறவிலும் நினைவுகள் மவுனமோ
நோய் உடலிலா மனதிலா தேவனே
நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே, ஓ
மான்களும் சொந்தம் தேடுமே
இம்மானிடன் செய்த பாவம் என்னவோ?
காவலே, சட்ட வேலியே
உன் பாதையில் பிள்ளைப் பாசம் இல்லையோ?
செல்வங்கள் குவிந்தது
மாளிகை வந்தது
சேவை புரிந்திட சேவகர் ஆயிரம்
தேடிக் கொண்டாடிட நண்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
No peace of mind
தேவனே, என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
கேள் தருகிறேன் என்றதே நீயன்றோ?
நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே, திறக்குமா சந்நிதி
என் கர்த்தரே, கிடைக்குமா நிம்மதி, ஓ
Oh lord, please answer my prayers
கண்களில் கண்ணீர் இல்லையே
இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே
கொண்டு வா, இல்லை கொண்டு போ
உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்
முள்ளை வளைத்தொரு மகுடம் அணிந்ததும்
ஆணி அடித்தொரு சிலுவை அறைந்ததும்
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது
தேவனே, என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்