Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Muthalam Santhippil
Barani, Swarnalatha, Unnikrishnan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
முதலாம் சந்திப்பில்
நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில்
என் இதயம் கொடுத்தேனே
மூன்றாம் சந்திப்பில்
முகத்தை மறைத்தேன்
நான்காம் சந்திப்பில்
நகத்தை கடித்தேன்
காதல் வந்தது, காதல் வந்தது
காதல் வந்ததடா
காதல் வந்தது, காதல் வந்தது
காதல் வந்ததடா
ஐந்தாம் சந்திப்பில்
நான் ஐக்கியம் ஆனேனே
ஆறாம் சந்திப்பில்
நான் பைத்தியம் ஆனேனே
ஏழாம் சந்திப்பில்
எட்டி பிடித்தேன்
எட்டாம் சந்திப்பில்
கட்டி பிடித்தேன்
காதல் வந்தது, காதல் வந்தது
காதல் வந்ததடி
காதல் வந்தது, காதல் வந்தது
காதல் வந்ததடி
இன்னும் கோடி கோடி ஆசை
நெஞ்சில் உள்ளே உள்ளதடி
முதலாம் சந்திப்பில்
நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில்
என் இதயம் கொடுத்தேனே
அதிகாலை நேரத்திலே
கோலங்கள் நீயும் போட
தொலைவாக நான் நின்று
உன்னை சந்திப்பேன்
பால் வாங்கும் நேரத்தில்
பக்கத்தில் சந்திப்பேன்
நூராண்டு வயதான
உள்ளூரு நூலகத்தில்
மறைவாக மறைவாக
தினம் சந்திப்போம்
பேரூந்துக்குள்ளே தான்
பெரு மூச்சால் சந்திப்போம்
காலை நேரத்தில்
உன் கடிதம் சந்திப்பேன்
மாலை நேரத்தில்
உன் மடியில் சந்திப்பேன்
சாயங்காலம், சாலை ஒரம்
நீயும் நானும் தேயும் நேரம்
இருவரும் கூடி இமைகளை மூடி
இதழால் சந்திப்போம்
முதலாம் சந்திப்பில்
நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில்
என் இதயம் கொடுத்தேனே
இ.பி.கோ. சட்டம் போட்டு
ஊர் அடங்க செய்தாலும்
ஓடோடி ஒரு நொடியில்
உன்னை சந்திப்பேன்
மண்வாசம் நீ ஆனால்
மழையாகி சந்திப்பேன்
இரு கையில் ஆணி வைத்து
சிலுவைக்குள் அரைந்தாலும்
உயிர் நீர்து, உடன் வந்து
உன்னை சந்திப்பேன்
பூவாக நீ ஆனால்
காற்றாகி சந்திப்பேன்
போதிமரமாக
நீ மாறி போனாலும்
புத்தமதமாகி
நான் உன்னை சந்திப்பேன்
ஆயுள் உள்ள காலம் வரை
அன்பே, நாமும் கூடி வாழ
உன்னை பெற்ற அம்மா அப்பா
இருவரை சந்திப்போம்
முதலாம் சந்திப்பில்
நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில்
என் இதயம் கொடுத்தேனே
மூன்றாம் சந்திப்பில்
முகத்தை மறைத்தேன்
நான்காம் சந்திப்பில்
நகத்தை கடித்தேன்
காதல் வந்தது, காதல் வந்தது
காதல் வந்ததடா
காதல் வந்தது, காதல் வந்தது
காதல் வந்ததடா
இன்னும் கோடி கோடி ஆசை
நெஞ்சில் உள்ளே உள்ளதடா