Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Solli Tharava
Manoj-Gyan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்
சொல்லித்தரவா?
சொல்லித்தரவா?
சொல்லித்தரவா, இடை மூடும் மேலாடை தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் சுவையல்லவா
சொல்லித்தரவா?
சொல்லித்தரவா?
சில்லென்ற காற்றே நீ வழிப்போகும் நேரம்
நில்லென்று நான் கூற ஏனிந்த நாணம்
சொல்லி தெரியாத கலை இன்று கண்டேன்
சொல்லத்தெரியாத சிலையாகி நின்றேன்
கண்மணி உந்தன் கருவிழி பேசும் கதைகள் புரிகிறது
வெண்பனி தூவும் விடியல் வரையில் அதுவும் தொடர்கிறது
சொல்லித்தரவா?
ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்
சொல்லித்தரவா, இடை மூடும் மேலாடை துணையல்லவா
துணை சேர என் நாணம் தடையல்லவா
தடை சொல்லும் பெண்ணுக்கு வழி சொல்லவா
வழி சொல்லும் உன் பாடம் புதிதல்லவா
சொல்லித்தரவா?
ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்
சொல்லித்தரவா?
இரவென்றும் பகலென்றும் அறியாத உறவு
யார் இங்கு தந்தாலும் சுகம்தானே வரவு
இன்னும் ஏனிங்கு தடைமீறத் தயக்கம்
இல்லை வேறெங்கும் இதைமீறும் மயக்கம்
அச்சம் நாணம் அறிந்ததும் புரிந்ததும் காதல் விளையாட்டு
மிச்சம் மீதி இருந்ததும் மறைந்தது காமன் சொல்கேட்டு
சொல்லித்தரவா?
சொல்லித்தரவா, இடை மூடும் மேலாடை தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் சுவையல்லவா
டடடட டான்
சொல்லித்தரவா