Skip to content

Thanga Nilavukkul

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே எந்தன் கனவுக்குள் கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே கொடி முல்லை கொடி கட்டும் மன்னனோ இன்பச் சிறை பட்டு திரை இட்ட கண்ணனோ கொடி முல்லை கொடி கட்டும் மன்னனோ இன்ப சிறை பட்டு திரை இட்ட கண்ணனோ நிலவுக்குள் வண்ண மலருக்குள் தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே எந்தன் கனவுக்குள் கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே முத்துக்கள் கொட்டிய நட்சத்திரம் அந்த நட்சத்திரம் என் பக்கம் வரும் வித்துக்கள் கட்டிய முத்துச் சரம் என் பக்கம் வந்து பொன் முத்தம் தரும் ஒரு முத்துத்தான் உடைபட்டுத் தான் பூவாய் மாறும் அதைத் தொட்டுத் தான் அணை கட்டித்தான் பாடும் ராகம் வண்ணச் சிலை பெற்றுத் தரும் அன்புச் சின்னக்கிளி கலை கற்றுத் தரும் அந்த வண்ணக்கிளி சிந்திடாமால் வந்த தேனே சொந்தமானேன் நான் நிலவுக்குள் வண்ண மலருக்குள் தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே எந்தன் கனவுக்குள் கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே இந்த பூவைக்கு பூ வைத்து சூடிடும் மாமனுக்கு நல்ல தோகையின் தோகையில் சொக்கிடும் மாமனுக்கு அன்புக்கும் பங்கிற்கு ஆள் வரப் போகுது அம்மா என் அப்பா என்றாட்டிடப் போகுது வெட்கத்தில் மின்னிடும் தங்கக் குடம் அது தொட்டு தரும் உன் சொர்க்கம் வரும் கற்பனை கட்டிய முல்லைச்சரம் எனை கட்டிக் கொள்ள தன் கையைத் தரும் பல வண்ணம் தான் ஒரு எண்ணம் தான் பாலாய் ஊறும் ஒரு செல்லம் தான் இவன் செல்வன் தான் நாளை தோன்றும் கன்னம் தனில் சின்னம்பல என்று எண்ணித் தரும் இன்னும் பல இன்பங்களை சொல்லித் தரும் முத்து மாலை நித்தம் போட சித்தமானேன் நான் நிலவுக்குள் வண்ண மலருக்குள் தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே எந்தன் கனவுக்குள் கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே கொடி முல்லை கொடி கட்டும் மன்னனோ இன்பச் சிறை பட்டு திரை இட்ட கண்ணனோ கொடி முல்லை கொடி கட்டும் மன்னனோ இன்ப சிறை பட்டு திரை இட்ட கண்ணனோ நிலவுக்குள் வண்ண மலருக்குள் தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே எந்தன் கனவுக்குள் கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே