Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nee Indri Naan Illaye
Kapa Chaitanya, Khanish, Monika Chandrashekhar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தலைக்கோதும் விரலும்
அலைபேசியில் குரலும்
இவை எங்கே என்று
கேட்டேன் நான் இன்று
இனி இவள் இல்லை
எதுவும் புரியவும் இல்லை
விடை அறிந்துமே மனது
வினா கேட்கிறது
நாம் இல்லாமல் நான் பார்க்கும் கடலே
உன் வாசம் இல்லாமல் இனி நாளும் தேடலே
கலைந்த கட்டில் காரிகை கரத்தில்
கார்குழல் மேனி தீண்டியதே
அசையும் விசையில் இசை போட்டு தேனை நீயும் ஊட்டுகிறாய்
ஆறடி மழலை எனக்கென்ன கவலை உன் கரம் இடையில் நான் இருக்க
இருபது நிமிடம் இரக்கமே இல்லா
இன்பத்தை எனக்கே காட்டி விட்டாய்
தீ உன் மூச்சோடு
நீ என் உயிரோடு
நாளை கனவோடு
சிரிப்போம் பறப்போம்
அணைத்தையும் கடப்போம்
இருட்டில் வந்த மின்மணி ஒளியே
மறுபடி இருட்டினில் தள்ளுறியே
உந்தன் கண்கள் பேசிய மொழிகள் எந்தன் செவிகளும் கேட்கிறதே
நாளும் உந்தன் நினைவுகளாலே
நானும் இங்கே தவிக்கிறேன் தனியே
மூழ்கி கிடக்கிறேன் இருளில் முழுதாய் தெரியலையா
சேர்ந்து சென்ற பாதை தடத்தை
கடலலை நிதமும் தேடிடுமே
கொஞ்சி பேசிய பூங்கா நிழல்கள் நிழல்களை தேடி அலைகிறதே
ஏன் இங்கு புலம்புகிறேன்
ஏன் இங்கு கலங்குகிறேன்
தனிமையின் தீயும் என்னை
சுடுதே விடுதே கொல்லுதே
இனி ஒரு இரவும் நீயின்றி முடியாது
இனி ஒரு கனமும் நீயின்றி நகராது
காதலின் ஆழம் ஆழியும் அறியாது காதலியே
நீ இன்றி நான் இல்லையே
கலைந்த கட்டில் கண்ணீர் குளத்தில் காரிகை கையில் தேடுகிறேன்
அவளுடன் கழித்த இரவெல்லாம்
அவள் நினைவுகள் இப்போ கழிக்கின்றேன்
ஆறடி மழலை மனம் எல்லாம் கவலை உன் தோள் சாய வழியும் இல்லை
இருக்க அனைத்து ஆறுதல் சொல்ல
ஆருயிர் நீயும் அருகில் இல்லை
வானம் நான் இங்கே
நீலம் நீ அங்கே
நம் காதல் கதை இன்று
நீரில் கிறுக்கிய காவியம் ஆச்சே