Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chinna Chinna
S. P. Balasubrahmanyam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்த சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்த சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன...
உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்குதம்மா
ஹஹஹா அது தீண்டும் மேகம் இல்ல, தேகம் சிலிர்க்குதம்மா
உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
பாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னை சொல்வதுண்டு
இனமும் குளமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமமென உணர்திடும் மழையே
சின்ன சின்ன...
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன தூறல் என்ன
பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
படிச்சவன் பாட்ட கெடுத்தான் கதையா இல்ல இருக்கு
பிழைக்குன்னு எழுதலியே மழைக்குன்னு தானே எழுதிருக்கேன்
ஓஹோ... மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் வானம் பார்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னாள் இங்கே யார் அறிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடி எனும் இசை முழங்கிட வரும்
மழை எனும் மகளே
சின்ன சின்ன...
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன...