Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oru Koappai
Andrea Jeremiah
Popularity · Moderate
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Hey!!
ஒரு கோப்பை வேண்டும் கொண்டுவா
கடவுளே! இந்த உலகமே
தலை சுற்றவைக்கும் மதுக்குப்பியா?
கல் பிறந்ததும், மண் பிறந்ததும், பெண்ணும் பிறந்தாளே
அவள் கண்ணில் அன்றே கண்ணீர் துளிகள் கண்ணம் தீண்டியதே
பெண் என்பவள் ஆண்பார்வையில் மோகச்சதைதானா
என்னை வெட்டி கூறிட குத்திக்கிழித்திட விரல்கள் நீண்டிடுதே
விழி உறங்கவில்லை
உணவிறங்கவில்லை
இந்த நாள் எனை விட்டுவிட்டு நகரவில்லை
ஒரு இறகெனவே
வரும் மரணம் அதில்
நான் பறந்திடத்துடித்தேனே
Hey!
ஒரு கோப்பை வேண்டும் கொண்டுவா
Hey!
அதில் சாவை ஊற்றி ஏந்தி வா
🎶
தற்கொலை எண்ணம் உங்களுக்குள் தலைதூக்குமாயின்
நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது
104 என்ற இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசுவதுதான்
மறுமுனையில் உங்கள் மீது பிரியத்துடன் அக்கறை கொண்டு பேசி
உங்கள் எண்ணத்தை மாற்றுவதற்காக அரசாங்க பணியாளர்கள் காத்திருக்கிறார்கள்
இதை எப்பிட்றா ஒரு பாட்டுக்கு நடுவுல சொல்லலான்னு நீங்க கேட்பீங்க
ஆனா ஒரு படத்திற்கு நடுவுல
தம்மடிக்கக்கூடாது தண்ணியடிக்கக்கூடாதுன்னு சொல்லலாங்கிறப்ப
இதையும் சொல்லலாம்
🎶
என் தனிமை தீவில்
வரும் வெள்ளைப் பூவே
நீ மரணம் காக்கும் தெய்வச்சிறகா
உண்மையிலே எப்பொழுதோ இறந்து விட்டேன்
இறப்பை நான் இப்பொழுதே மறந்துவிட்டேன்
கொல்லாமல் கொல்லும் காதல் போதை வேண்டி வாங்கினேன்
நில்லாமல் ஓடும் பூமி போதும் சாக ஏங்கினேன்
பெண்கள் நெஞ்சில் உள்ள துன்பம் எல்லாம்
செத்தால் கூட சாகாதிருக்கும்
Hey!
ஒரு கோப்பை வேண்டும் கொண்டுவா
Hey!
அதில் சாவை ஊற்றி ஏந்தி வா
🎶