Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Veeran Thiruvizha (From "Veeran")
Chinnaponnu
,
Hiphop Tamizha
,
Muthu Sirpi
,
Pranavam Sasi
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கும்பம் விளக்கு வச்சி குரு பூச ஆகுதுன்னு
கரகம் விளக்கி வச்சி கன பூச ஆகுதுன்னு
உனக்கு மாங்கா இளநீரு அந்த மனம் புடிக்கும் என்று சொல்லி
உனக்கு தேங்கா இளநீரு தெவுரு அடிக்கும் என்று சொல்லி
உனக்கு கொம்பால இளநீரு கொண்டு வந்தோம் பூசையினு
இந்த பூச முகம் பாக்க அங்க புறப்பட்டு நீ எழும்ப
நெய் விளக்கு ஏத்தி வச்சி கும்புடுறோம் வீரனே
நெல்லு மணி எடுத்து வந்தோம் எத்துக்கனும் வீரனே
நெத்து காய ஓடைச்சு வச்சோம் உனக்கென வீரனே
முக்கனிய பறிச்சு வந்து, சாமி
முழுசா படையளித்தோம், சாமி
உனக்கு கட்டு பட்டு, சாமி
உசுர கொடுத்து நிப்போம், சாமி
உதிர திலகமிட்டு
அறுபடை வீடு கொண்ட திருமுருகன்
அவன் தளபதியாம் வீரன் இவன்
குறைகளை ஓடி வந்து தீர்க்கின்றவன்
ஆலமரம் போல நின்று காக்கும் இவன்
ஆஹா மாவீரனே
வீரனே
உச்சி முகத்த தலகாட்டி
ஒசந்து நிற்கும் மாவீரனே
பஞ்சம் பறந்து பயந்தோடும்
அவன் பார்வை பட்டா போதும் மகனே
விழி காத்து மொழி காத்து வழி கொடுப்ப
இருளான உலகுக்கு ஒளி கொடுப்ப
சந்தனத்த நீ பூசி முகம் சிரிப்ப
சங்கடத்த தூசியாக்கி நெருப்பெரிப்ப
திக்கு தெசை எங்கும் யமக்காக
திமிறி நிற்கும் மாவீரனே
சுத்தி முறைக்கும் படைக்கெதிர
புரவி எறி நீ வா சூரனே
(சாமி) நெய் விளக்கு ஏத்தி வச்சு
(சாமி) நெல்லுமணி எடுத்து வந்தோம்
(சாமி) நெத்துகாய ஒடச்சு வச்சோம்
(சாமி) முக்கனியா பறிச்சு வந்து
ஆஹா மாவீரனே
வீரனே
வீரனே
மாவீரனே
ஓடி வா, தேடி வா, ஆடி வா நீ வீரனா
ஓடி வா, தேடி வா, ஆடி வா நீ வீரனா
(சாமி) வீராதி வீரனே சூராதி சூரனே (சாமி)
என்னை காப்பவனே வினை தீர்ப்பவனே (சாமி)
வீராதி வீரனே சூராதி சூரனே (சாமி)
என்னை காப்பவனே வினை தீர்ப்பவனே (சாமி)