Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kalakalakkuthu
Mano
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தின தின தான்
தின தின தான்
தின தின
கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
என் அண்ணன் தோள் மேலே பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை ஆளும் ராணி ஆனாளே
அதிகாலையில் சுப்பிரபாதம் கேட்கும் இனிமேல்
நம் வீட்டில் எப்போதும்
கலகலக்குது கலகலக்குது எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
அண்ணி உன் வடிவில் அன்னையை பார்த்தேன்
அன்பினை பார்த்தேன் இந்த சொந்தம் ஒரு ஆனந்தம்
ஒன்றில் ஒன்றாக நெஞ்சங்கள் கலக்கும்
பிறர்க்கென துடிக்கும் இந்த வாழ்க்கை ஒரு ஆனந்தம்
திருமணங்கள் எல்லாமே சொர்க்கத்திலே முடிவாகும்
அண்ணி இவள் திருமணமோ சொர்க்கத்தையே உருவாக்கும்
நீங்கள் தரும் அன்பினிலே குழந்தையென மாறுது என் மணம்
கலகலக்குது கலகலக்குது எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
அழகான மல்லிப்பூ பொண்ண பாரு
வெக்கத்தால் ரோசாவா மாறுது பாரு
கன்னத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு
காதோடு காதல் சங்கதி பேசு
தம்பி உன் குறும்பை இவள் மிக ரசிப்பாள்
தவறுகள் செய்தால் தாயை போல இவள் கண்டிப்பாள்
தம்பி நீ இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்தால்
முட்டி போடச்சொல்லி தண்டிப்பாள்
எதிர்த்து என்னை ஜெயிப்பதற்கு
யாருமில்லை முன்னாலே
அண்ணி ஒரு சொல் சொன்னால்
அடங்கிடுவேன் அன்பாலே
இறைவனுக்கு நன்றி சொல்வோம்
இவள் நமக்கு கிடைத்தது ஒரு வரம்
கலகலக்குது கலகலக்குது எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
என் அண்ணன் தோள் மேலே பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை ஆளும் ராணி ஆனாளே
அதிகாலையில் சுப்பிரபாதம் கேட்கும் இனிமேல்
நம் வீட்டில் எப்போதும்
கலகலக்குது கலகலக்குது எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ