Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kanavae Kalaigirathe - MassTamilan
Bhavatharini
,
Yuvan Shankar Raja
,
MassTamilan
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கனவே கலைகிறதே காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே
காதல் இது தானா உலகெல்லாம் வலிகள் பொது தானா
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவதும் அது தானா
வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில்
தனிமையிலே தினம் கத்தி கத்தி உன்தன் பேர் சொல்லி அழுறேனே
காற்று வந்து காதல் சொன்னதா
இது தானா காதல் இது தானா
வேரரும்பே வீசும் புயல் தானா
இது தானா காதல் இது தானா
அனு அனுவாய் சாகும் வழிதானா
கனவே கலைகிறதே காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே
காதல் இது தானா உலகெல்லாம் வலிகள் பொது தானா
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவதும் அது தானா
அழைப்பது கானல் நீரா
அறியாத பறவைக் கூட்டம்
தொடு வானம் போலே காதல்
அழகான மாயத் தோற்றம்
உனக்கான வார்த்தை அநியாயம் சிறையில் வாழ்கின்றதே
நமக்கான விண்மீன் நீ அறியும் முன்னே உதிர்கிறதே
தரையில் மோதி மழைத்துளி
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கிற போதும் சிரிக்கின்ற நானும்
உனக்காக நாளும் தேய்கிறேன்
சரி தானா காதல் பிழைதானா
ஆயுள் வரை தொடரும் வலி தானா
இது தானா காதல் இது தானா
ஐம்புலனில் ஐயோ தீ தானா
மழைநீர் சுடுகிறதே மனசுக்குள் அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே