Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pesaama Pesaama
Seeman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பேசாம பேசாம இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து
பேசாம பேசாமாதான் இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து
அட தோழா ரொம்ப நாளா
கேட்காம கேட்காம இருந்து
நாம போனமடா சூடு சொரண மறந்து
இப்ப போகுதடா கோவணமும் பறந்து
விதச்ச பயிரு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது
உணவில்லாமல் உழைச்ச வயிறு காய்ஞ்சு கிடக்குது
விதச்ச பயிரு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது
உணவில்லாமல் உழைச்ச வயிறு காய்ஞ்சு கிடக்குது
அடிக்கும் போது புழுவும் கூட எழுந்து துடிக்குது
அடிக்கும் போது புழுவும் கூட எழுந்து துடிக்குது
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது
அட தோழா ரொம்ப நாளா
பேசாம பேசாம இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து
வருசம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது
அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது
வருசம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது
அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது
எரியும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது
எரியும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது
உசிர் இருந்தும் உன் முதுகேன் குனிந்து நிக்குது
அட தோழா ரொம்ப நாளா
பேசாம பேசாம இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து
கேட்காம கேட்காமா இருந்து
நாம போனமடா சூடு சொரணை மறந்து
இப்ப போகுதடா கோவணமும் பறந்து
நாம போனமடா சூடு சொரணை மறந்து
இப்ப போகுதடா கோவணமும் பறந்து