Aasayilae (Female)
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
பெண்: தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு
பாட்டோடு வாழும் என் சாமியே
உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு
கேட்டாக்கா வாழும் உன் பூமியே
என் மூச்சு என் பேச்சு
நீதானயா என் வாக்கு நீ கேட்டு
காப்பத்தையா...
பெண்: ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண்: ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
பெண்: நானா பாடலயே
நீதான் பாட வச்ச
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
பெண்: ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண்: வைகையிலே வந்த வெள்ளம்
நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம்
வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே
காத்து சிந்துதான் பாடுது...
பெண்: பொன்னுமணித் தேரு
நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னைத் தேடி
நீ அங்க வந்து சேரு
விதை போட்டேன்
அது விளைஞ்சாச்சு நீ
வாயேன் வழி பாத்து
பெண்: ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண்: ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
பெண்: கண்ணுதான் தூங்கவில்ல...
காரணம் தோணவில்ல
பொண்ணு நான் ஜாதி முல்ல...
பூமாலை ஆகவில்ல
பெண்: கன்னி நான் நாத்து
கண்ணன் நீ காத்து
வந்துதான் கூடவில்ல
கூறைப் பட்டு சேலை
நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை
நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி நான் காத்திருக்கேன்
என்னை ஏந்த நீதானே
பெண்: ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண்: ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
பெண்: நானா பாடலயே
நீதான் பாட வச்ச
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
பெண்: ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி