Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Uravu Solla
P. Susheela
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன்
நெஞ்சில் இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன்
நெஞ்சில் இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
பொன் பொருளைக் கொள்ளை கொள்ள ஓடுவான்
யாரும் அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான்
பொன் பொருளைக் கொள்ளை கொள்ள ஓடுவான்
யாரும் அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான்
தன் பொருளை அவர்க்கு தந்து தேற்றுவான்
நெடுஞ்சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன்
ஆனால் பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன்
உடல் கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்
கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இன்று நாளை அவனும் கூட மாறலாம்
அவன் இரவில் தூங்கி பகலில் கூட வாழலாம்
கன்று கண்ட தாயைப் போல ஆகலாம்
அன்பு காதல் பாசம் அவனும் கூடக் காணலாம்
காதல் பாசம் அவனும் கூடக் காணலாம்
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன்
நெஞ்சில் இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்