Skip to content

Poove Mudhal Poove

Deva, Harish Ragavendra
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

பூவே முதற்பூவே. ஒரு பனித்துளி உனக்காக... போகும் வழியெங்கும், ஒரு புல்வெளி உனக்காக... காக்கை சிறுகூட்டில், ஒரு மிண்மினி உனக்காக... வானம் உடைந்தாலும், ஒரு விண்மீன் உனக்காக... கண்களின் இமையோரம், துளிக் கண்ணீர் உனக்காக... பூவே முதற்பூவே. ஒரு பனித்துளி உனக்காக... போகும் வழியெங்கும், ஒரு புல்வெளி உனக்காக... மடல்வெளியில் ஒரு வீட்டைக் கட்டி வைத்தேன் உனக்காக... மரப்பாச்சி பொம்மையினை, மணமுடித்தேன் உனக்காக... ஜோசிய கிளி நீயடி, என் ஜாதகம் உனக்காக... பிள்ளையார் சுழி நீயடி, என் கடிதங்கள் உனக்காக... கூந்தலில் நான் வாழ்ந்திட, தினம் பூப்பேன் உனக்காக... பூவே முதற்பூவே. ஒரு பனித்துளி உனக்காக... போகும் வழியெங்கும், ஒரு புல்வெளி உனக்காக... கடல்நீரை தூரெடுத்து, குளிக்க வைப்பேன் உனக்காக... வானவில்லை தோளுரித்து, சேலை நெய்வேன் உனக்காக... பூஜ்ஜியம் போல் பிறைநிலா... அதில், வளையல்கள் உனக்காக... மின்னலின் சிறு கீற்றினில், இரு மெட்டிகள் உனக்காக... என் உடல் வெரும் கூடுதான்... உயிர் உள்ளது உனக்காக... பூவே முதற்பூவே. ஒரு பனித்துளி உனக்காக... போகும் வழியெங்கும், ஒரு புல்வெளி உனக்காக... காக்கை சிறுகூட்டில், ஒரு மிண்மினி உனக்காக... வானம் உடைந்தாலும், ஒரு விண்மீன் உனக்காக... கண்களின் இமையோரம், துளிக் கண்ணீர் உனக்காக... பூவே முதற்பூவே. ஒரு பனித்துளி உனக்காக... போகும் வழியெங்கும், ஒரு புல்வெளி உனக்காக...