Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oru Killiyin - Duet
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
(உறவு உறவு உறவு உறவு)
இரு கிளிகள் உறவினிலே புதுக் கிளி ஒன்று வரவு
(வரவு வரவு வரவு வரவு)
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெலாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு (புதிது புதிது)
வரவு வரவு (இனிது இனிது)
கனவு கனவு (புதிய கனவு)
ஆ...
ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
(உறவு உறவு உறவு உறவு)
இரு கிளிகள் உறவினிலே புதுக் கிளி ஒன்று வரவு
முத்து ரத்தினம் உனக்குச் சூட
முத்திரைக் கவி இசைந்து பாட
நித்தம் நித்திரை கரைந்து ஓட
சித்தம் நித்தமும் நினைந்து கூட
சிறு மழலை மொழிகளிலே
(இனிமை தவழ இதயம் மகிழ)
இரு மலரின் விழிகளிலே
(இரவும் மறைய பகலும் தெரிய)
ஆசையால் உனை அள்ள வேண்டும்
அன்பினால் எனை கொள்ள வேண்டும்
சேரும் நாள் இதுதான்
(லல லல லல லல லல)
ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
(உறவு உறவு உறவு உறவு)
இரு கிளிகள் உறவினிலே புதுக் கிளி ஒன்று வரவு
(வரவு வரவு வரவு வரவு)
கட்டளைப் படி கிடைத்த வேதம்
தொட்டணைப்பதே எனக்கு போதும்
மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
முத்து புன்னகை எனக்கு போதும்
ஒரு இறைவன் வரைந்த கதை
(புதிய கவிதை இனிய கவிதை)
கதை முடிவும் தெரிவதில்லை
(இளய மனதை இழுத்த கவிதை)
பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பெனும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இது தான்
(லல லல லல லல லல)
ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
(உறவு உறவு உறவு உறவு)
இரு கிளிகள் உறவினிலே புதுக் கிளி ஒன்று வரவு
(வரவு வரவு வரவு வரவு)
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெலாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு (புதிது புதிது)
வரவு வரவு (இனிது இனிது)
கனவு கனவு (புதிய கனவு)
ஆ...
ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
(உறவு உறவு உறவு உறவு)
(ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு)
(இரு கிளிகள் உறவினிலே புதுக் கிளி ஒன்று வரவு)
(ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு)