Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yen Azhaga
Sreekanth Hariharan
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏன் அழகா என்னை காக்க வைத்து பார்க்கிறாய்
ஏழை இவள் உசுரோட பாரம் சேர்க்கிறாய்
காத்திடுவேன் உனக்காக நூறு சென்மமே
கண்கள் ரெண்டிலே கடலையும் அடக்கினேன்
அட கோடி கோடியாய்
கொட்டி கொடுத்தாலும்
கொடுக்காத என் மனச
நீ கெடுத்தேயடா வயச
எட்டி புடுச்சியடா உசுர
உன் மொரட்டு தனமான பாசத்துலையே
நானும் கூட கொஞ்சம் பயந்தேன்
உன் கிறுக்கு தனமான பார்வையிலே
இந்த பாவி சிறுக்கியும் விழுந்தேன்
திண்டாடி நிக்குறேன் நானடா
உன் பொண்டாட்டி மனசையும் பாரடா
இனி எந்நாளும் உனக்கு நானடா
உன்னோட மீசைய முறுக்கணும்
உன் பொண்டாட்டியாக நான் மெரட்டனும்
கொஞ்சம் அடங்கி ஒடங்கி நீ நடக்கணும்
கஞ்சி ஆக்கி போட்டாலும் குடிக்கணும்
எந்நாளும் என்னை தாங்கனும்
கண்ணாக உன் கண்ணாக
அம்மாடி அதுக்குள்ள தொவங்குற
எம்மாடி எம்புட்டு பொலம்புற
என்னை கலக்கு கலக்குன்னு கலக்குற
கொத்து இடுப்பு சாவியா குலுங்குற
உன்னால ஆட்டம் காணுறேன்
அடி மனசில் பட படன்னு வெடிய செதறவுட்ட
அடியே அழகு சிறுக்கி
என் மனச ஒடச்ச கிறுக்கி
உன்ன கடத்த வேணும் இறுக்கி
என் இரும்பு தோலுகுள்ள கரும்ப நீ வெதைச்ச
களவ நானும் கொஞ்சம் மறக்க
சின்ன கொழந்த போல என்னை கொஞ்சி தூக்கிபுட்ட
தாய போல உன்னை நெனைக்க
உன்னாலே ஆளானேன்
உன் முகம்தான்
என்னை கொஞ்சி பார்க்க தூண்டுதே
என் மொகமோ
மருதாணி போல செவந்ததே
வெட்கம் என்னவோ
என் வாழ்வில் இது போல் இல்லையே
எனக்கென்னதான்
நடந்ததோ மறந்ததே
அன்பால தெனம் உன்னை ஆளனும்
என் ஆசை இரவுல கூறனும்
உன்னை இறுக்கி புடிச்சுதான் உறங்கணும்
மெல்ல இழுத்து போத்திதான் கெறங்கணும்
அஞ்சாறு புள்ள ஏந்தணும்
உன்னாலே என் மேலே
கண்ணாக தினம் உன்னை காக்கணும்
உன் ஆசை முழுசையும் சேக்கணும்
உன்னை கொழந்தை போலதான் பாக்கணும்
கொஞ்சி குமரி ஆகையில் தூக்கணும்
உன் மூச்சு காத்தில் வாழனும்
கள்ள சிறுக்கி இவன் மனச
அடிச்சி தொவச்சிபுட்ட
துணியா மனசு வெளுக்க
நான் புதுசா பூமியில் பொறக்க
உன் நெனப்புல மெதப்புல நடக்க
உன் கொழந்த பேச்சிக்குள்ள
கொழந்தை ஆகுறேன்டி
அழகி நாளும் உன்னை ரசிச்சேன்
உன்னை மெரட்டி மீசைக்குள்ள
அடைக்க வீரமில்ல
பொட்டி பாம்பாக அடைஞ்சேன்
அன்பாலே உன் அன்பாலே
போதுமடா இனி என்ன வேணும் வாழ்விலே
நீ அருகில் உன் காதல் ஒன்று போதுமே
ஒன்றாய் கூடியே வானமாய் வாழலாம்
ஒன்றாய் கூடியே வானமாய் வாழலாம்