Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kadhaippoma
Leon James; Sid Sriram; Ko Sesha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
திரனா, திர நம்-திரனா, திரனா, திர நம்-திரனா
தன, நம்-தன, நம்-தன, நம்-தன, தரிகிட தாரா-னா
திரனா, திர நம்-திரனா, திரனா, திர நம்-திரனா
தன, நம்-தன, நம்-தன, நம்-தன, தரிகிட தாரா-னா
தன, நம்-தன, நம்-தன, நம்-தன, தரிகிட தாரா-னா
நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணமாக ஆனாய் இன்று
உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக அணையை இங்கே மிஞ்சுதே
நூலறுந்த பட்டம் போலே உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன? கேட்க வேண்டும் உன்னை
காலம் கைகூடினால்
கதைப்போமா? கதைப்போமா? கதைப்போமா?
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா? கதைப்போமா? கதைப்போமா?
நீ பேச-பேச காயம் ஆறுமே
அதிகாலை வந்தா அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடுநேரம் காய்ந்து கதகதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்
உன்னை இன்று பார்த்ததும் என்னை நானே கேட்க்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து எங்கே தேடி அலைந்தாயோ?
உண்மையென்று தெரிந்துமே நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே தைரியங்கள் தோன்றுமே
கதைப்போமா? கதைப்போமா? கதைப்போமா? (கதைப்போமா?)
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா? (கதைப்போமா?) கதைப்போமா? (கதைப்போமா?) கதைப்போமா?
நீ பேச-பேச காயம் ஆறுமே
கதைப்போமா? (கதைப்போமா?)
கதைப்போமா? (கதைப்போமா?) கதைப்போமா?