Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Roja Kadale - MassTamilancom
Chinmayi Shankar Mahadevan Sunidhi Chauhan - MassTamilancom
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ரோஜா கடலே, என் ராஜா மகளே
என் ஆசை கனியே வா தனியே
காதல் துணையே, என் கண்ணின் மணியே
என் இன்னொரு உயிரே வா அருகே
பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்
பொன்னில் வார்த்தது மேனி
ம்ம் பூச்செடியின் மேல் காற்றடித்தாலும்
உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி?
வா-வா, அலைகடல் சிறுதுளி வா-வா
பெண்ணே வா-வா, எரிமலை சிறுப்பொறி வா-வா
வா-வா, அலைகடல் சிறுதுளி வா-வா
கண்ணா வா-வா, எரிமலை சிறுப்பொறி வா-வா
உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது
அதுபோல் நம் காதல் மானே
ரோஜா கடலே, என் ராஜா மகளே
என் ஆசை கனியே வா தனியே
காதல் துணையே, என் கண்ணின் மணியே
என் இன்னொரு உயிரே வா அருகே
செவ்வாய் குயிலே, பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வார் குழலே, கண் நேர்காண் எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே
வாட் படை கொண்டு தாக்கியபோதும்
வானம் வளைவதும் இல்லை
நார் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை
போவோம், நிலம் விட்டு நிலவுக்கு போவோம்
இனி வாழ்வோம், உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம்
கண்டங்கள் பிண்டாலும், மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா-வா
செவ்வாய் குயிலே, பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வார் குழலே, கண் நேர்காண் எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே
தேனே-தேனே, தேனே-தேனே, வா-வா தேனே
மானே-மானே, மானே-மானே, எந்தன் மானே
பருவச்சிட்டே, பவளத் திட்டே
இதழை தந்தால் எதையும் தருவேன்
புகழும் ஐயா, புழுகுப் பையா
சிறு போர் வந்தால் என்னை மறப்பாய்
வில்லும் அம்பும் சேர்ந்தாலும்
சேர்ந்தே வாழ்வதும் இல்லை
சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிரிவே இல்லை
வா-வா, அலைகடல் சிறுதுளி வா-வா
பெண்ணே வா-வா, எரிமலை சிறுப்பொறி வா-வா
வா-வா, அலைகடல் சிறுதுளி வா-வா
கண்ணா வா-வா, எரிமலை சிறுப்பொறி வா-வா
கண்டங்கள் பிண்டாலும், மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா-வா
தேனே-தேனே, தேனே-தேனே, வா-வா தேனே
மானே-மானே, மானே-மானே, எந்தன் மானே
தேனே-தேனே, தேனே-தேனே, வா-வா தேனே
மானே-மானே, மானே-மானே, எந்தன் மானே