Aandavan Padachchaan
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
ஆண்டவன் படைச்சான்
என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
என்ன அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
ஆண்டவன் படைச்சான்
என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
என்ன அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
உலகம் எந்தன் கைகளிலே
உருளும் பணமும் பைகளிலே
உலகம் எந்தன் கைகளிலே
உருளும் பணமும் பைகளிலே
சோதிச்சு பாத்தா நானே ராஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாமும்
இங்கேடா உண்டு ஹோய்
ஆண்டவன் படைச்சான்
என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
என்ன அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்
ஆஹா நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன்
போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்
அவன் இவனே இவன் அவனே
அட இன்றும் இல்லை நாளை இல்லை இரவில்லை
பகலில்லை இளமையும் முதுமையும் முடிவும் இல்லை
அட இன்றும் இல்லை நாளை இல்லை இரவில்லை
பகலில்லை இளமையும் முதுமையும் முடிவும் இல்லை
ஹோஹோஹோ
ஆண்டவன் படைச்சான்
என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
என்ன அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை
பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை
ஆஹா பகவான் படைத்த பணமெல்லாம் பொது உடமை
கையில் கிடைப்பதை வீசி ரசிப்பது தான் என் கடமை
அந்த பெருமை எந்தன் உரிமை
நல்ல வெள்ளி துட்டு அள்ளிகிட்டு துள்ளி துள்ளி ஆட விட்டு
சிரிப்பதும் மகிழ்வதும் தனி மகிமை
ஹோஹோஹோ
ஆண்டவன் படைச்சான்
என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
என்ன அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
உலகம் எந்தன் கைகளிலே
உருளும் பணமும் பைகளிலே
உலகம் எந்தன் கைகளிலே
உருளும் பணமும் பைகளிலே
சோதிச்சு பாத்தா நானே ராஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாமும்
இங்கேடா உண்டு
ஆண்டவன் படைச்சான்
என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
ஆண்டவன் படைச்சான்
என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
என்ன அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
என்ன அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்
என்ன அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்