Naan Kaanum Kana
Sam C.S., Sweta Mohan
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
நான் காணும் கனா நீயா, நீ நீயா
நான் தேடும் வினா நீயா, நீ நீயா
நான் காணும் கனா நீயா, நீ நீயா
நான் தேடும் வினா நீயா, நீ நீயா
என் கண்கள் கடலாகி போக
என் நெஞ்சம் உனக்காக வாழ
என்று சாய்வேன் நான் உன் தோளோடு
நம் கனவு புதிராகி வாட
என் நாட்கள் பதில் தேடி ஓட
என்று சேர்வேன் நான் உன் நிழலோடு
நீ போன பாதை அதை நான் பார்க்கிறேனே
எனை தேடி நீயும் வருவா என்றே
நீ சொன்ன வார்த்தை அதை நான் கேட்கிறேனே
எனை ஒரு நாள் நீதான் அழைப்பா என்றே
வானம் தாண்டி என்ன உள்ளது
வாழ்க்கை அது போல் மாயமானது
காயம் இங்கே காதலானது ஏனோ உன்னாலே
கானல் போல காலம் என்பது
கண்கள் முன்னே தூரம் போகுது
தேடல் எல்லாம் தோல்வியானது எல்லாம் யாராலே
நான் காணும் கனா நீயா, நீ நீயா
நான் தேடும் வினா நீயா, நீ நீயா