Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Maharajanodu
P. Unni Krishnan, K. S. Chithra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
கங்கைக்கொரு வங்கக்கடல் போல் வந்தான் அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக்கனா அவன் தந்தான் அவன் தந்தான்
கண்ணில் என்ன வண்ணங்கள் சின்னச் சின்ன மின்னல்கள்
கண்ணில் என்ன வண்ணங்கள் சின்னச் சின்ன மின்னல்கள் ஓர் காதல் பூத்ததோ
பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ
பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ
ஒரு ராகம் ஒரு தாளம் இணைகூடும்போது கானம்தான்
ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம். புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜனோடு ராணி வந்து சேரும். இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
மன்னன் தொட தன்னைத் தந்தாள் பூம்பாவை பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை பேராசை
சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்னப் பெண்ணின் விண்ணப்பம் நீ கேட்க வேண்டுமோ
இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற
இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர
என்ன வேகம் என்ன தாகம் ஒரு காவல் தாண்டக் கூடுமோ
ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்