Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vanthenda Paalkaran
S.P. Balasubrahmanyam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹோய் வந்தேன்டா பால்காரன் அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
வந்தேன்டா பால்காரன் அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்
உன்னால முடியாது தம்பி அட
பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி
ஹோய் வந்தேன்டா பால்காரன் அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
சாணம் விழுந்தா உரம் பாரு
எருவை எரிச்சா திருநீறு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராறு
நீ மாடு போல உழைக்கலியே
நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே
வந்தேன்டா பால்காரன் அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தானனா தன தந்தானனா தன
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா
அட மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும்
செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அட மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும்
செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க
அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது தமிழ் பாலு
வந்தேன்டா பால்காரன் அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்
உன்னால முடியாது தம்பி
ஹா அட பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி
வந்தேன்டா பால்காரன் அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
ஆஹ் ஆ... ஹா... ஹோ ஹோ ஹோ
ஆஹ் ஆ... ஹா... ஆஹ் ஆ... ஹா...
யே ஹே ஹே... யே ஹே ஹே...
ஆஹ் ஆ... ஹா... ஆஹ் ஆ... ஹா...
ஆஹ் ஆ... ஹா...
Lyrics By: GS